×

பிடிஓவிற்கு மலரஞ்சலி

திருவள்ளூர்: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில், திருவள்ளுர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்த கே.சுவாமிநாதன் கொரோனா தொற்று நோயால் காலமானார். இதையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர் டாக்டர் சி.என். மகேஸ்வரன், மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக பணியாளர்கள் ஆகியோர் அவரது உருவப் படத்திற்கு மலரஞ்சலியும், மௌன அஞ்சலியும் செலுத்தினர்.


Tags : PDO , BDO, Inflorescence
× RELATED கொரோனாவுக்கு பிடிஓ பலி