×

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 6,33,555 வாகனங்கள் பறிமுதல்; ரூ.17.90 கோடி அபராதம் வசூல்: காவல்துறை தகவல்

சென்னை: இந்தியா உள்ளிட்ட 210 நாடுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 4வது  இடத்தில் உள்ளது. இந்தியளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. இதற்கிடையே, கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தினால் ஜூன் 31-ம் தேதி வரை 6-ம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவசியமின்றி வெளியே சுற்றித்திரியும் பொதுமக்கள் மீது நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில், தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 8,47,574 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 6,344 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஊரடங்கை மீறியதாக 6,33,555 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,893 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை, 7,72,585 வழக்குகளும், கடந்த 24 மணி நேரத்தில் 5,868 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுநாள் வரையில், ரூ.17.90 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.



Tags : Tamil Nadu , Tamil Nadu, curfew, vehicle confiscation, fines, police
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...