சென்னை: தமிழகத்தில் மேலும் 4,244 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் மட்டும் 1,168 பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரே நாளில் 3617 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 68 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.