×

2018-19ம் ஆண்டில் 841 கோடி பேர் பயணம்: ரயில்வேக்கு 51,008 கோடி வருமானம்

* லாபம் ஈட்டும் ஏசி ஸ்லீப்பர், ஏசி சேர் கார் வகுப்புகள் தனியார் வசம்
* ஐ.ஆர்.டி.எஸ்.ஏ தலைவர் சண்முகம் குற்றச்சாட்டு
* இந்திய ரயில்வேக்கு ஏற்படும் சேதம் பெரியதாகவும், நிரந்தரமாகவும் இருக்கும்.

சென்னை: கடந்த 2018-19ம் ஆண்டில் மொத்தம் 841 கோடி பேர் பயணம் செய்ததன் மூலம் ரயில்வேவுக்கு 51,008 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இந்நிலையில் புறநகர், சாதாரண இரண்டாம் வகுப்பு மற்றும் ஸ்லீப்பர் வகுப்புகள் மட்டும் இந்திய ரயில்வே வசம் இருக்கும். லாபம் ஈட்டும் ஏசி ஸ்லீப்பர் மற்றும் ஏசி சேர் கார் வகுப்புகள் தனியார் வசம் ஒப்படைப்பதா என்று ஐ.ஆர்.டி.எஸ்.ஏ தலைவர் சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: பயணிகள் ரயில்களை தனியார் நிறுவனங்களுக்கு அனுமதிப்பதில் அரசாங்கம் ஒரு தீர்க்கமான பாதகமான நடவடிக்கை எடுத்துள்ளது.

தனியார்மயமாக்கல் விதிகளின் இரண்டு முக்கிய உட்பிரிவுகள் தனியார் நிறுவனங்களுக்கு அதன் பயணிகளிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டிய கட்டணத்தை தீர்மானிக்கும் சுதந்திரம் மற்றும் தனியார் ரயில்களில் இணைக்கப்பட வேண்டிய ரயில் பெட்டிகளின் வகைகள் தனியார் நிறுவனங்களால் தீர்மானிக்கப்படும். சாமானிய மக்களுக்கு சேவையை எட்டா கனியாக மாற்றி விடும். தனியார் ரயில்கள் ஏ.சி ரயில் பெட்டிகள் கொண்ட ரயில்களை மட்டும் இயக்கும். ஏசி அல்லாத ஸ்லீப்பர்கள் வகுப்பு மற்றும் சாதாரண வகுப்பு இருக்காது. தனியார் ரயில்கள் லாபம் தரும் ஏ.சி ஸ்லீப்பர்கள் மற்றும் ஏ.சி. பகல் இருக்கை வசதி பயணிகளுக்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். மேலும் கட்டணத்தை தீர்மானிக்கும் சுதந்திரம் கட்டணத்தை அதிகரிக்க ஒரு கருவியாக பயன்படும்.

டைனமிக் டிக்கெட் கட்டணம், வார இறுதி கட்டணம், விடுமுறை கட்டணம் என பல வழிகளில் கட்டணம் உயர்த்தப்படும்.மேலும் விருப்பமான இருக்கை தேர்வு, சாமான்கள் எடுத்துச் செல்வது வைபை இணைப்பு, படுக்கை விரிப்பு போன்ற சேவைகளுக்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படும். இந்தியன் ரயில்வே இந்த சேவைகளை இலவசமாக வழங்குகிறது. இது தவிர சில ரயில் நிலையங்களில் பயணிகள் கூடுதலாக ரயில் நிலைய பயன்பாட்டு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். தனியார் ரயில்வே இப்போது இந்திய ரயில்வே வழங்கும் எந்த கட்டண சலுகைகளையும் வழங்க மாட்டார்கள். மேலும் இரண்டாவதாக பாதிக்கப்படுபவர்கள் தொழிலாளர்கள் ஆக இருப்பார்கள்.  

இந்திய ரயில்வேக்கு ஏற்படும் சேதம் பெரியதாகவும், நிரந்தரமாகவும் இருக்கும். லாபம் ஈட்டும் ஏசி ஸ்லீப்பர் மற்றும் ஏசி சேர் கார் வகுப்புகள் தனியார் நிறுவனங்களுக்கு பரிசாக வழங்கப்படுகின்றன. கடந்த 2018-19ம் ஆண்டில் மொத்தம் 841 கோடி பயணிகளில் 55 கோடி பயணிகள் (6 சதவீதம் மட்டுமே) அனைத்து முன்பதிவு வகுப்புகளிலும் பயணம் செய்தனர். இந்த 6 சதவீதம் முன்பதிவு பயணிகள் மூலம் பெறப்பட்ட வருமானம் 32,159 கோடி ஆகும். இது பயணிகள் வணிகத்தின் மொத்த வருமானத்தில் 63 சதவீதம் புறநகர், சாதாரண இரண்டாம் வகுப்பு மற்றும் ஸ்லீப்பர் வகுப்புகள் மட்டும் இந்திய ரயில்வே வசம் இருக்கும் லாபம் ஈட்டும் ஏசி ஸ்லீப்பர் மற்றும் ஏசி சேர்கார் வகுப்புகள் தனியார்வசம் இருக்கும்.

இந்திய ரயில்வேக்கு மற்றொரு பாதிப்பு என்னவென்றால் தனியார் ரயில் கால அட்டவணையின் 60 நிமிடங்களுக்கு முன்னும், பின்னும் மொத்தம் 120 நிமிடங்களுக்கு இந்திய ரயில்வே எந்த புதிய ரயில்களையும் அதே வழி தடத்தில் அறிமுகப்படுத்த முடியாது. ரயில் நிலையங்கள், இருப்பு பாதை, பிரிட்ஜஸ், சிக்னல், டிக்கெட் வழங்குதல் மற்றும் அனைத்து ரயில் செயல்பாடு போன்ற முக்கிய அம்சங்கள் ரயில்வேயின் பொறுப்பாக இருக்கும். ரயில்வே உற்பத்தி யூனிட்கள் மற்றும் ஒர்க்‌ ஷாப்க்கள் பெரும் இழப்பை சந்திக்கும். மேக் இன் இந்தியா என்ற அடிப்படை தேசிய ெகாள்கையை பின்பற்ற முடியாமல் போகும். தனியார் நிறுவனங்கள் ரயில்கள் மற்றும் என்ஜின்களை அதன் விருப்பப்படி யாரிடமிருந்தும் வாங்கலாம். அதனால் உள்நாட்டு திறனை பயன்படுத்தாமல் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஆர்டர் செய்ய முடியும்.

மேலும் 12 கிளஸ்டர்கள் பெயரிடப்பட்ட நகரங்களுக்கு மட்டும் அல்ல ஆனால் தனியார்வலை பரவலாக முக்கிய நகரங்களும் பின்னபட்டுள்ளது. அதாவது செகந்திரபாத், சென்னை, பெங்களூர், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, பாண்டிச்சேரி மற்றும் தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களையும் இணைக்கும் டிரங்க் பாதைகளில் அமைந்துள்ளன. அண்மையில் முக்கிய நகரங்களை இணைக்கும் அதிக அடர்த்தி கொண்ட பாதைகள் மற்றும் மிகவும் பயன்படுத்தப் படுகின்ற பாதைகளில் ரயில்வே நிர்வாகம் அதிக முதலீடுகள் செய்துள்ளது.

பயணிகள் ரயில் இயக்கத்தில் தனியார் பங்கேற்பு வழியாக தனியார் தொழில் முனைவோருக்கு சிறந்த லாபம் ஈட்டும் வணிக வாயப்பை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ரயில் பயணிகள் தொழிலாள வர்க்கம், இந்திய ரயில்வே மற்றும் தேசத்தின் நலன் காக்கப்படவில்லை. எனவே தேசத்தின் நலனை கருத்தில் கொண்டு தனியார் பயணிகள் ரயில் ஆபரேட்டர்களை அனுமதிக்கும் முடிவை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு ஐ.ஆர்.டி.எஸ்.ஏ தலைவர் சண்முகம் கூறியுள்ளார்.

2018-19ம் ஆண்டில் மொத்த பயணிகள்
வகுப்புகள்    பயணிகளின்
எண்ணிக்கை கோடியில்    சதவீதம்
புறநகர் பயணிகள்        478    57
அனைத்து முன்பதிவு வகுப்புகள்    55    6
சாதாரண வகுப்புகள்        308    37
மொத்தம்            841

பயணிகள் மூலம் பெறப்பட்ட வருமானம்
வகுப்புகள்    ரூபாய் கோடியில்    சதவீதம்
புறநகர் பயணிகள்        2,813    6
அனைத்து முன்பதிவு வகுப்புகள்    32,159    63
சாதாரண வகுப்பு        16,036    39
மொத்தம்            51,008

Tags : passengers ,Railways , Indian Railways, AC Sleeper, AC Add Car
× RELATED அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து; ஒருவர் பலி: 25க்கும் மேற்பட்டோர் காயம்!!