×

ஊராட்சி தலைவி கணவர் பலி

பூந்தமல்லி: பூந்தமல்லி ஒன்றியத்திற்கு உட்பட்ட சென்னீர்குப்பம் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் 49 வயதுடைய இவர் அதிமுகவை சேர்ந்தவர். இரண்டு முறை இதே ஊராட்சியில் துணைத் தலைவராக இருந்தவர். இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த சில தினங்களாக ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடல் சென்னீர்குப்பத்தில் உள்ள சுடுகாட்டில் உரிய பாதுகாப்புடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவரது மனைவி கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இதே பகுதியில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கொரோனாவுக்கு கடந்த மாதம் பலியானது குறிப்பிடத்தக்கது.


Tags : panchayat leader , The head of the panchayat, the husband, kills
× RELATED காஷ்மீர் மாநிலத்தில் கிராம...