×

தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர்கள் தேர்தல் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

சென்னை: தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மை செயலாளர் மற்றும் தேர்தல் அதிகாரி வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தலில் வாக்களிப்போருக்கான தமிழ்நாட்டை சார்ந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பார்கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும் முத்தவல்லிகள் பிரிவுகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு, 8ம் தேதி (இன்று) வெளியிடப்படுகிறது.

இந்த வாக்காளர் பட்டியல் தேர்தல் அதிகாரி மற்றும் அரசு முதன்மைச் செயலாளர், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, நாமக்கல் கவிஞர் மாளிகை, இரண்டாவது தளம், தலைமைச் செயலகம், சென்னை. முதன்மைச் செயல் அலுவலர், தமிழ்நாடு வக்பு வாரியம், சென்னை. அனைத்து மண்டல வக்பு கண்காணிப்பாளர்களின் அலுவலகங்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தலைமைச் செயலகம், சென்னை-9ன் அதிகாரப்பூர்வ வலைதளம் ஆகியவற்றில் வெளியிடப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Board Members Release Final ,Wakpu ,Tamil Nadu , Tamil Nadu Wakpu Board, Election of Members, Final Voter List, released today
× RELATED விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை...