×

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பைக்கில் 2 பேர் பயணம் செய்தால் 500 அபராதம்: போக்குவரத்து போலீஸ் நடவடிக்கை

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தினசரி 500 முதல் 950 வரை நோய் தொற்று உயர்ந்து வருவதால் மக்கள்  அச்சத்தில் உள்ளனர். இதனை கட்டுப்படுத்தும் வகையில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், மாநகராட்சி எல்லைக்குள் வசிக்கும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியே கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். மேலும், வாகனங்களில் முகக்கவசம் அணியாமல் சென்றால் ரூ.500 அபராதமாகவும், நடந்து செல்லும் போது முகக்கவசம் அணியாமல் சென்றால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும், கார்களில் பயணம் செய்தால் ஓட்டுனர் உட்பட 3 பேரும், பைக்கில் ஒருவர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்று  மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

ஆனால் மக்கள் வாகனங்களில் செல்லும்போது யாரும் அரசு உத்தரவுப்படி சமூக இடைவெளியே கடைபிடிக்கப்படுவதில்லை. குறிப்பாக பைக்கில் செல்வோர் இரண்டு முதல் மூன்று பேர் பயணம் செய்யும் நிலைதான் சென்னையில் உள்ளது. இதனால் சென்னையில் நாளுக்கு நாள் நோய் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசு உத்தரவை மீறி வாகனங்களில் சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல் பயணம் செய்யும் நபர்கள் மீது மாநகர போக்குவரத்து போலீசார் நேற்று முதல் போக்குவரத்து வாகன சட்டம் 179 சட்டப்பிரிவின் கீழ் ரூ.500 அபராதம் விதித்து வருகின்றனர். அந்த வகையில், பைக்கில் நோய் தொற்றும் ஏற்படும் வகையில் 2 பேர் பயணம் செய்யும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து ரூ.500 அபராதமும். முக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியவர்கள் மீது ரூ.500 அபராதமும் விதத்து வருகின்றனர்.


Tags : traffic police action ,Coronation Prevention: Traffic Police Action , Corona, bike, 500 fine, traffic police
× RELATED சித்தூரில் ஹெல்மெட் அணியாமல் வரும்...