×

கேரளாவில் லாட்டரி குலுக்கல் துவக்கம்

திருவனந்தபுரம்: கேரளாவில் லாக்டவுனால் நிறுத்தப்பட்டிருந்த லாட்டரி குலுக்கல் நேற்று முதல் தொடங்கியது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கேரளாவில் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் லாட்டரி விற்பனை மற்றும் குலுக்கல்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. பின்னர் லாட்டரி விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் குலுக்கல் நடக்காமல் இருந்தது. இந்த நிலையில் நேற்று முதல் லாட்டரி குலுக்கல் மீண்டும் தொடங்கியுள்ளது. இதுபோல கேரளாவில் பொதுமுடக்கத்தை தொடர்ந்து 66 சினிமாக்களின் படப்பிடிப்பு, எடிட்டிங், டப்பிங் உட்பட பல பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

தற்போது உள்ளரங்கில் 50 பேருடன் படப்படிப்பு நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து 66 சினிமாக்களின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்கும் என மலையாள சினிமா தயாரிப்பாளர் சங்க தலைவர் ரஞ்சித் கூறினார். இந்த சினிமாக்களுக்கான படப்பிடிப்பு முடிந்த பின்னரே புதிய திரைப்படங்களுக்கான பணிகள் தொடங்கும் எனவும் அவர் கூறினார். இந்த நிலையில் ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டிருந்ததால், உள்ளரங்கில் டிவி ெதாடர் படப்பிடிப்புகளும் தற்போது தொடங்கி உள்ளன.

Tags : Launch ,Kerala , Kerala, lottery
× RELATED ‘எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக...