×

அதிக போதையால் குடந்தை பெண் பலி?

கும்பகோணம்: கும்பகோணம் அருகே அளவுக்கு அதிகமான போதையால் பெண் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருப்பனந்தாள் அருகே உள்ள குறிச்சி கிராமத்தை சேர்ந்த பன்னீர் செல்வம் மனைவி ஜானகி(50). துப்புரவு பணியாளர். பன்னீர் செல்வம் ஏற்கனவே இறந்து விட்டார். ஜானகிக்கு குடிப்பழக்கம் இருந்தது.

இந்தநிலையில் அந்த பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே ஜானகி இன்று காலை இறந்து கிடந்தார். இதுபற்றி அறிந்ததும் பந்தநல்லூர் போலீசார் சென்று சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிந்து அதிக போதையால் ஜானகி இறந்தாரா அல்லது வேறு எதுவும் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : baby girl , Over-the-counter, childish girl, kills?
× RELATED திருச்சி மணப்பாறை அருகே முட்புதரில்...