×

ஜூன் 1ஆம் தேதி முதல் நீதிமன்றத்திலேருந்தே காணொலி காட்சி மூலமாக வழக்குகளை விசாரிக்கலாம்: பதிவுத்துறை சுற்றறிக்கை

சென்னை: ஜூன் 1ஆம் தேதி முதல் நீதிமன்றத்திலேருந்தே காணொலி காட்சி மூலமாக வழக்குகளை விசாரிக்கம்படி நீதிபதிகளுக்கு பதிவுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. தலைமை நீதிபதி அறிவுறுத்தலின்படி 33 அமர்வுகளில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள விசாரணை அறைகளில் இருந்தே வழக்குகளை விசாரிக்க நிர்வாக குழு குடத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி நீதிபதிகள் தங்கள் லேப் டாப் அல்லது ஐ பேடை நீதிமன்றத்துக்கு  கொண்டுவர தலைமை பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுவார்களா என்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும். அதுவரை ஆன்லைன் முறையிலேயே வழக்குகளை தாக்கல் செய்ய வேண்டிய நடைமுறை தொடர வேண்டுய நிலை நீடிக்கிறது என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags : court , On June 1, the court will hear the video footage, hear the cases, and record the circular
× RELATED கரூர் அருகே அரவக்குறிச்சி...