×

தமிழகத்தில் மேலும் 827 பேருக்கு கொரோனா?.. சென்னையில் மட்டும் 559 பேர் பாதிப்பு என தகவல்

சென்னை: தமிழகத்தில் மேலும் 827 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் மட்டும் 559 பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் இருந்து வந்த 74 பேருக்கும், கர்நாடகாவில் இருந்து வந்த 20 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 639 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Chennai , Tamil Nadu, Corona, Madras
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...