×

தனிநபர் இடைவெளியை பின்பற்ற ஏதுவாக தேர்வு மையங்களின் எண்ணிக்கை 15,000 ஆக அதிகரிப்பு : மத்திய அமைச்சர்

டெல்லி :  நாடு முழுவதும் சுமார் 15,000 மையங்களில் சிபிஎஸ்சி தேர்வுகள் நடைபெறும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் தெரிவித்துள்ளார்.ஜூலை 1ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெறவுள்ள 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் 15,000 மையங்களில் நடைபெறவுள்ளது. தனிநபர் இடைவெளியை பின்பற்ற ஏதுவாக தேர்வு மையங்களின் எண்ணிக்கை 5 மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக 3,000 மையங்களில் நடந்த தேர்வுகள், தற்போது 15,000 மையங்களில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.




Tags : choice centers ,Union Minister , Individual, gap, selection centers, number, 15,000, increase, Union Minister
× RELATED சொத்து விவரங்கள் மறைத்த ஒன்றிய...