×

மேலும் 759 பேருக்கு தொற்று பரவல் தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 15,512 ஆக உயர்வு

* இறப்பு 103 ஆக உயர்வு
* சென்னையில் 624 பேருக்கு பாசிட்டிவ்

சென்னை: தமிழகத்தில் 759 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் சேர்த்தால் மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,512 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சென்னையில் 624 பேர் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 103 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இதுவரை 3 லட்சத்து 97 ஆயிரத்து 340 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டது. அதில் நேற்று மட்டும் 12,155 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதில் அதிகபட்சமாக சென்னையில் 624 பேருக்கும், செங்கல்பட்டு 39, கடலூர், மதுரை, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, தேனி ஆகிய மாவட்டங்களில் தலா 1 நபர், காஞ்சிபுரம் 13,  தென்காசியில் 2, திருவள்ளூர் 17, திருவண்ணாமலை 6, விழுப்புரம் 4 என 710 பேருக்கும்,

இதைப்போன்று மகாரஷ்டிராவில் இருந்து தமிழகம் வந்த 24, டெல்லி, ெதலங்கானா, உத்தரபிரதேசம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் வந்த தலா 1 நபருக்கும், மேற்கு வங்கம் 3, ராஜஸ்தான் 6, பிலிப்பைன்ஸ் 5, லண்டனில் இருந்து வந்த 7 பேர் என 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதன்படி தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 759 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,512 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 363 பேர் குணமாகி வீட்டுக்கு சென்றுள்ளனர். அதன்படி 7,491 பேர் குணமாகி வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 7,915 ஆக உள்ளது.

இந்நிலையில் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 67 வயது ஆண், ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 75 வயது பெண், ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது ஆண் மற்றும் 55 வயது ஆண், ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 53 வயது ஆண் என சென்னையை சேர்ந்த 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 103 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 9,876 ஆண்கள், 5,631 பெண்கள், 5 திருநங்கைகள் என 15,512 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 612 மாதிரிகளின் முடிவுகள் வரவேண்டியுள்ளது.

39 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு
செங்கல்பட்டில் 2 குழந்தைகள், காஞ்சிபுரம், நெல்லை, திருவள்ளூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் தலா 1 குழந்தைகளும், சென்னையில் ஒரு வயதில் 5 குழந்தைகளும், 2 ஒரு மாத குழந்தைகள் என மொத்தம் 26 குழந்தைகள் தூத்துக்குடி 7 என 39 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Tamil Nadu , Tamil Nadu, Corona, Curfew
× RELATED தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை...