×

வெளிமாநில வரத்து நின்றதால் பயறு, பருப்பு வகை விலைகள் அதிகரிப்பு

விருதுநகர்: கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவால் பருப்பு, பயறு உள்ளிட்ட மளிகை பொருட்கள் வரத்து இல்லாததால், விருதுநகர் சந்தையில் மொத்த வணிகம் 2வது வாரமாக முடங்கி கிடக்கிறது.  விருதுநகர் சந்தைக்கு கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட வடமாநிலங்கள் மற்றும் பர்மாவில் இருந்து பயறு, பருப்பு வகைகள், ஆந்திராவில் இருந்து வத்தல், புளி, சீரகம், கடுகு, சோம்பு, ராஜஸ்தானில் இருந்து மல்லி வருகிறது. மார்ச் மாதத்தில் கொள்முதல் நிறுத்தப்பட்ட நிலையில் ஏற்கனவே பருப்பு, மல்லி, வத்தல் குடோன்கள், மில்களில் இருப்பு குறைவாக இருந்தது. திடீரென கொரோனா பரவலை குறைக்க மத்திய அரசு பிறப்பித்த ஊரடங்கு உத்தரவால் அனைத்து பொருட்கள் வரத்து முற்றிலும் நின்று போனது.

எண்ணெய் உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பு ஆலைகளும் உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளன. விருதுநகர் மார்க்கெட்டில் பயறு, பருப்பு, வத்தல், புளி, சீரகம், பொரிகடலை என இருப்பு குறைவாக இருப்பதால், ஒவ்வொரு சில்லறை கடைகளிலும் இஷ்டத்திற்கு விலை நிர்ணயம் செய்து விற்பனை நடைபெறுகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.


Tags : Exotic, lentils, legumes
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...