×

மூடப்படும் பள்ளிகள்

நன்றி குங்குமம் முத்தாரம்

ஜப்பானில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் உடல் நலத்தைக் கருத்தில்கொண்டும், கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்கவும் ஆரம்பப்பள்ளி முதல் உயர்நிலைப் பள்ளி வரை அனைத்து வகையான பள்ளிகளும் அங்கே மூடப்படுகின்றன.

சுமார் 1.3 கோடி குழந்தைகள் பள்ளி மற்றும் விடுதிகளிலிருந்த தங்களின் உடைமைகளுடன் வீட்டுக்குத் திரும்பினர். மறுபடியும் பள்ளிகள் திறக்கப் படும் தேதி எப்போது என்பது கொரோனா வைரஸிடம் இருக்கிறது. இதனால் இந்நகரம் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது. கொரோனா வைரஸானது இங்கு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனால் உலக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Schools , Coronavirus is rapidly spreading in Japan.
× RELATED கர்நாடக மாநிலம் கல்புர்கியில் கொரோனா வைரஸ் காரணமாக பள்ளிகள் மூடல்