×

பழைய வணிக வளாகங்களை மறுவடிவமைத்து நவீன வணிக மையங்கள் அமைக்க திட்டம்: மாநகராட்சி தகவல்

சென்னை,: சென்னையில் உள்ள பழைய வணிக வளாகங்களை மறுசீரமைப்பு ெசய்து நவீன வசதிகளுடன் கூடிய வணிக மையங்களாக மாற்ற சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னை மாநகராட்சியில் சிறு மற்றும் குறு தொழிலாளர்கள் வியாபாரம் செய்வதற்கு ஏதுவாக 152 வணிக வளாகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த வணிக வளாகங்களில் மொத்தம் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு வாடகை மிகவும் குறைவு என்பதால் வியாபாரிகள் நேரடியாக பயன்பெறும் வகையில், சந்தை விலைக்கேற்ப வாடகையை மாற்றியமைக்க 2017ம் ஆண்டு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டது. இதன்படி வாடகை நிர்ணயம் செய்யப்பட்டு வியாபாரிகள் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது. இந்த வணிக வளாகங்களில் கடைகள் காலியாகும் போது, பொது ஏலத்தின் அடிப்படையில் கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும். ஏலம் எடுத்தவர்கள் ஒருவருக்கு 3 ஆண்டுகள் வரை கடைகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஏலம் எடுத்தவர் முதலில் ஒரு வருட வாடகையில் 25 சதவீத தொகை முன்பணமாக செலுத்த வேண்டும்.

ஒதுக்கீடு ஆணை பெற்றவுடன் மீதம் உள்ள தொகையை செலுத்த வேண்டும். இதன்படி கடை ஒதுக்கீடு பெற்ற வியாபாரிகளின் பட்டியல், கடை எண் உள்ளிட்ட தகவல்கள்  சென்னை மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வணிக வளாகங்கள் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை என்றும் ஒரு சில வணிக வளாகங்களை கட்டி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் பழுதடைந்து காணப்படுவதாகவும் வியாபாரிகள் கருத்து தெரிவித்தனர். மேலும் இந்த வணிக வளாகங்களை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர். அதையேற்று, இந்த வணிக வளாகங்களை மறு சீரமைத்து வணிக மையங்களாக மாற்ற சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடந்தது. இதில் கட்டிடத் துறை தலைமை பொறியாளர் ராஜேந்திரன், கண்காணிப்பு பொறியாளர் விஜயகுமார், செயற்பொறியாளர் முருகன், சிறப்பு திட்டங்கள் துறை கண்காணிப்பு பொறியாளர் பாபு, ஸ்மார்ட் சிட்டி தலைமை செயல் அலுவலர் ராஜ் செரூபல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள வணிக வளாகங்கள் மூலம் ஆண்டுக்கு₹20 கோடி வருமானம் கிடைக்கிறது. இந்த வணிக வளாகங்களை மறுசீரமைப்பு செய்து வணிக மையம் (Commerical Hub) அமைக்கப்படவுள்ளது. பொதுமக்கள், தனியார் பங்களிப்புடன் வடிவமைப்பு, கட்டுமானம், செயல்பாடு  முறையில் இந்ததிட்டம் செயல்படுத்தபட உள்ளது. முதல்கட்டமாக மிகவும் பழைய வணிக வளாகங்கள் இடிக்கப்பட்டு நவீன வசதிகளுடன் கூடிய வணிக மையங்களாக மாற்றம் செய்யப்பட உள்ளன. தற்போது உள்ள வணிக வளாகத்தில் கடைகள் மட்டுமே உள்ளது. புதிய அமைக்கப்படவுள்ள வணிக மையத்தில் பார்க்கிங் வசதி, உணவு மையம் என்று தனியார் வணிக வளாங்களுக்கு இணையான வசதிகள் இருக்கும். 


Tags : business centers ,corporation , Modern Business Centers, set up plan, corporation, information
× RELATED நெல்லை மாநகராட்சியில் தூய்மைப்...