×

உலகின் திமிர் பிடித்த பூனை

நன்றி குங்குமம் முத்தாரம்

உலகின் மிக அழகான, அதேசமயம்  திமிர் பிடித்த,  கொழுப்பு மிக்க பூனை கார்ஃபீல்ட்.ஜிம் டேவிஸ் என்ற கார்ட்டூனிஸ்ட்டின் கைவண்ணத்தில் உருவான காமிக் பூனை இது.இந்தப் பூனையின் மூலம் 800 மில்லியன் டாலர் சம்பாதித்துள்ளார் ஜிம் டேவிஸ்.இந்த கார்ட்டூன் ஸ்ட்ரிப் 1978-ல் 41 செய்தித்தாள்களில் வெளியானது. தற்போது உலகம் முழுவதும் 2580 இதழ்களில் வெளியாகிறது. இதற்கு 300 மில்லியன் வாசகர்கள் உள்ளனர். டிவி சீரியல், திரைப்படம் என எல்லாவற்றிலும்  வந்து, கார்ஃபீல்டைப் பற்றி தெரியாத சிறுவர்கள், பெரியவர்களே இல்லை என்ற நிலை கூட மேற்கத்திய நாடுகளில் உண்டு.கார்ஃபீல்ட் எம்பயர் என்ற அமைப்புக்கு உலகளவில் 30 மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்கள். மேலும் கார் ஃபீல்டுக்கு ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராமில் பக்கங்கள் உண்டு. டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கார்ஃபீல்ட் காமிக்ஸ் 2004-ம் ஆண்டு முதல் வெளிவருகிறது.இந்த பூனை அண்ணனைப் பற்றி சொல்லவேண்டுமானால், சுத்த சோம்பேறி, பெருந்தீனிக்காரர், நேர்மையற்றவர். இந்த பூனைக்கு ஜான் ஆர்பக்கிங் என முதலாளி மற்றும் ஓடி என்ற குட்டி நாய் என பல காமிக்ஸ் ஜோடிகள் உண்டு.இது தவிர, மேலும் 5 கேரக்டர்களைக் கொண்ட காமிக்ஸ் ஸ்ட்ரிப்புகளையும் ஜிம் டேவிஸ் உருவாக்கியுள்ளார்.

இப்ப விஷயம் என்னவென்றால் ஜிம் டேவிஸூக்கு தான் வரைந்த காமிக்ஸ்களை வைத்துக் கொண்டு என்ன செய்வது எனத் தெரியவில்லை. மேலும் அவற்றைத் தொடர்ந்து சேமித்து வைப்பதும் சிரமமாக உள்ளது. அவர் வசம் தற்போது  11000 காமிக்ஸ் ஸ்டிரிப்புகள் உள்ளன. வேண்டும் ரசிகர்கள் வாங்கட் டுமே என்கிறார் கார்ட்டூனிஸ்ட். தினசரி ஸ்ட்ரிப்ஸ் 500 டாலர், 700 டாலர் விலையிலும் ஞாயிறு வெளியாகும் பெரிய காமிக்ஸ் 1500  டாலர் விலைக்கும் விற்கிறதாம். உலகில் மிகவும் பரவலாக வெளியாகும் காமிக்ஸ் ஸ்டிரிப் கார்ஃபீல்ட் தான்.ஜிம் டேவிஸ் இப்போதும் கார்ஃபீல்ட் சார்ந்த புதுப்புது காமிக்ஸ்களை உருவாக்கி வருகிறார்.1982-  1991 -ம் ஆண்டுகளுக்கு இடையே சி.பி. எஸ் (C.B.S) டிவியில் சீரியல் வெரைட்டியில் தொடர்ந்து இது வெளி வந்தது. கார் ஃபீல்டுக்கு பாஸ்தாவுடன் கூடவே பிஸ்தா மற்றும் ஜஸ்கிரீம் என்றாலும் உயிர். அசந்தால் திருடித் தின்னவும் அது தயார். இதன் புதுப்புது ராங்கித்தனங்களையும், கொழுப்புத் தனங்களையும் சோம்பேறித் தனத் தையும் அறிந்து கொள்பவர் இன் றும் வாங்கிப் படித்து ரசிக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! திமிர் பிடித்தவர்களுக்கும் ரசிகர்கள் உண்டு என்றால் அது அண்ணன் கார்ஃபீல்டுக்குத் தாங்க.

Tags : World , World's arrogant cat
× RELATED சீனாவில் இருந்து கப்பலில் சென்னை வந்த...