×

பொங்கல் பண்டிகையன்று ரயிலில் ஓசி பயணம் ரூ.9லட்சம் அபராதம் வசூல்

சென்னை: பொங்கல் பண்டிக்கைக்கு ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததாக 2,329 வழக்கு பதிவு செய்யப்பட்டு, ரூ.9 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. வெளியூர்களில் வசித்து வந்த மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கலை கொண்டாடி வருகின்றனர். இதற்காக மக்கள் ரயில் டிக்கெட்களை பல மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் புறநகர், எக்ஸ்பிரஸ் ரயில்களில் பலர் டிக்கெட் முன்பதிவு செய்யாமல் பயணம் செய்வதாக புகார் வந்தது. அதன்படி ரயில்வே நிர்வாகம் சார்பில் சோதனை மேற்கொண்டனர். அதில் பொங்கல் அன்று மட்டும் டிக்கெட் எடுக்காமல் சென்றதாக 2,329 பேரை பிடித்தனர். அவர்களிடம் ரூ.8.89 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், கடந்த மே மாதம் முழுவதும் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததாக 27,982 வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில் 10 சதவீதம் வழக்கு ஜனவரி 14ம் தேதி மட்டும் ஒரேநாளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போதெல்லாம் ஒவ்வொரு மாதமும் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் 44,166, டிசம்பர் மாதம் 38345 என நாளுக்கு நாள் டிக்கெட் இல்லா பயணம் அதிகரித்தே வருகிறது.
முக்கியமாக, கிழக்கு மாநிலங்களுக்கு செல்லும் பயணிகள் டிக்கெட் இல்லாத பயணம் மேற்கொள்வதால் தொல்லை ஏற்படுவதாக மற்ற பயணிகளிடம் இருந்து தொடர்ந்து புகார் வந்து கொண்டே உள்ளது. பண்டிகை காலங்களில் இதுபோன்ற பயணங்கள் அதிகரித்து வருகிறது. அவர்கள் மீது ரயில்வே தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.


Tags : Ozi , Pongal Festival, Rail OC Travel, Rs 9 Lakh, Fines .Sool
× RELATED அரக்கோணத்தில் மதுக்கடையில் கத்தியை...