×

பென்சிலால் குறிக்கும் வழக்கம் இல்லை: டிஎன்பிஎஸ்சி விளக்கம்

சென்னை:  டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிடப்பட்ட அறிவிப்பு: தொகுதி 1 க்கான நேர்முகத்தேர்வில் வெளிப்படையாக மோசடி நடைபெற இருப்பதாக ஒரு அரசியல் தலைவர்  அறிக்கை வெளியிட்டிருக்கிறார் இதை தேர்வாணையம் திட்டவட்டமாக மறுக்கிறது.
 எந்த நேர்முகத் தேர்விலும் பென்சிலால்  குறிக்கும் வழக்கம் தேர்வாணைய நடைமுறையில் எப்போதும் இல்லை. நேர்முகத் தேர்வில் தேர்வருக்கு வழங்கப்படும் மதிப்பெண் வல்லுநர் குழுவினால் கலந்தாலோசிக்கப்பட்டு ஒருமித்த முடிவாக மட்டுமே மதிப்பெண் வழங்கப்படும். அவ்வாறு தேர்வர்களுக்கு வழங்கப்படும்  மதிப்பெண், கணினி வழியே மதிப்பீடு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட குறியீட்டுத்தாளில் பேனா மையினால் மட்டுமே பதிவு செய்யப்படுகிறது. எனவே தேர்வர்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை’ எனக்கூறப்பட்டுள்ளது.


Tags : TNPSC , TNPSC
× RELATED மதிப்பெண், சீனியாரிட்டி முறையில் பதவி...