ஜார்க்கண்ட் சட்டப்பேரவை 2-ம் கட்ட தேர்தலில் 63.66 சதவீத வாக்குகள் பதிவு: டிசம்பர் 23-ந்தேதி வாக்கு எண்ணிக்கை

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட்டில் மொத்தம் 81 தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு  கடந்த நவம்பர் 30 முதல் டிசம்பர் 20 வரை 5 கட்டமாக வாக்கு பதிவுகள் நடைபெறுகின்றன. அனைத்து வாக்குகளும் டிசம்பர் 23-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். முதல் கட்டமாக 13 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. சத்ரா, கும்லா, பிஷ்னுபூர், லோகர்தாகா, மணிகா, லதேஹர், பாங்கி, தால்டோகஞ்ச், பிஷ்ராம்பூர், சாதாரோர், ஹூசைனியாபாத், கார்வா மற்றும் பகவந்த்பூர் ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

ஜார்க்கண்டில் ஆளும் பாரதீய ஜனதா முதல் முறையாக கூட்டணி அமைக்காமல் போட்டியிடுகிறது. பாஜகவுக்கு எதிராக ஜே.எம்.எம் கூட்டணி போட்டியிடுகிறது. இந்த கூட்டணியில் காங்கிரஸ், ஆர்.ஜே.டி ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இந்நிலையில், இரண்டாம் கட்டத் தேர்தலில் 20 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. வாக்குப்பதிவையொட்டி, மத்திய துணை ராணுவப் படை, போலீசார் உட்பட, 42 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்றைய தேர்தலில் 63.36 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

Tags : Jharkhand ,assembly election , Jharkhand, Assembly election, ballot count
× RELATED வாக்காளர் சேர்ப்பு முகாம்களில் 28,400 விண்ணப்பம் பெறப்பட்டன