×

தனியார் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை முறைகேடு ஐகோர்ட் நீதிபதி மீது சிபிஐ வழக்குப்பதிவு : லக்னோ வீட்டில் அதிரடி சோதனை

புதுடெல்லி: தனியார் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை முறைகேடு தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சுக்லா மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து, லக்னோவில் உள்ள அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தியது. உத்தர பிரதேச மாநிலம், லக்னோவில் உள்ள பிரசாத் மருத்துவ அறிவியல்  கல்லூரியில் போதுமான வசதிகள் இல்லாததால் மாணவர் சேர்க்கைக்கு தடை விதித்து, கடந்த 2017ம் ஆண்டு மே மாதம் மத்திய அரசு உத்தரவிட்டது. தடையை எதிர்த்து பிரசாத் கல்வி அறக்கட்டளை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. பின்னர், இந்த மனு திரும்ப பெறப்பட்டது. இதையடுத்து, கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதி லக்னோ உயர் நீதிமன்றத்தின் அலகாபாத் கிளையில் மற்றொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதில், மருத்துவ கல்லூரிக்கு ஆதரவாக பணம் பெற்றுக் கொண்டு, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சுக்லா மாணவர் சேர்க்கைக்கு அனுமதித்து உத்தரவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்த சிபிஐ, கிரிமினல் சதி மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நீதிபதி சுக்லா மற்றும் சட்டீஸ்கர் உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஐஎம் குட்டுசி, பகவான் பிரசாத் யாதவ், பிரசாத் அறக்கட்டளையை சேர்ந்த பாலஷ் யாதவ், பவ்னா பாண்டே சுதிர் கிரி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. இதையடுத்து, லக்னோ, மீரட், டெல்லி உள்ளிட்ட இடங்களில் சிபிஐ நேற்று அதிரடி சோதனை நடத்தியது இதில் லக்னோவில் உள்ள நீதிபதி சுக்லாவின் வீட்டிலும் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : CBI ,college student , CBI files case, private medical college student
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...