தென் மாவட்டங்களில் லேசான மழை பெய்யும்

சென்னை: வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக,  தென் மாவட்டங்களில் சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  குமரிக்கடல் பகுதியில் இலங்கையை ஒட்டிய பகுதியில் நிலை கொண்டுள்ள காற்று சுழற்சியின் காரணமாக தென் மாவட்டங்கள் மற்றும் கடலோரப் பகுதியில் மழை பெய்து வருகிறது.  இந்நிலையில், வெப்ப சலனம் காரணமாக வளி மண்டல மேல் அடுக்கில் ஏற்பட்டுள்ள காற்று சுழற்சி மற்றும் குமரிக் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்தம் காரணமாக தென் மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழை பெய்யும்.


Tags : districts , Southern Districts, Rain
× RELATED டெல்டா மற்றும் தென் கடலோர...