×

பல அரசியல் கட்சிகள் வந்தாலும், அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

மதுரை: அமெரிக்க பயணம் முழு வெற்றி பயணமாக அமைந்தது, பல முதலீட்டாளர்களை சந்தித்து பேசினேன் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் தேர்தல் தேதி குறித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே மதுரை சென்ற துணை முதல்வர் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; நாடாளுமன்ற தேர்தலில் இருந்த கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும்.

பல அரசியல் கட்சிகள் வந்தாலும், அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. யார் இணைந்தாலும், யார் பிரிந்தாலும் அதிமுகவிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. கூடுதல் கட்சிகளும் பேசி வருகின்றன. கூட்டணி கட்சிகளுடன் பேசி இட ஒதுக்கீடு அறிவிக்கப்படும். மேலும் மேயர் தேர்தல் முறையில் மாற்றம் வந்தால் நிச்சயம் தெரிவிப்போம் எனவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; அரசுமுறை பயணமாகவே அமெரிக்கா சென்றேன். தமிழகத்தில் முதலீடு செய்யுமாறு பலரிடம் கூறியுள்ளோம். பயணம் வெற்றிகரமாக அமைந்தது என கூறியுள்ளார்.


Tags : O. Pannirselvam ,AIADMK ,parties , Multi-party, AIADMK, Deputy Chief Minister
× RELATED இலங்கை நாடாளுமன்றத்தேர்தலில்...