×

திருமணமான 3 மாதத்தில் ஐ.டி ஊழியர்

புழல்: புழல் புத்தாகரம் வெங்கட சாய் நகர், 9வது தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (30). ஐ.டி கம்பெனியில் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். இவருக்கு, கடந்த 3 மாதங்களுக்கு முன், சன்மதி என்பவருடன் திருமணம் நடந்தது. குடும்ப தகராறு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன், சன்மதி மதுரவாயலில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால், மனமுடைந்த விக்னேஷ் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புழல் போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.


Tags : IT employee , IT employee , 3 months of marriage
× RELATED ஐ.டி ஊழியர் வீட்டை உடைத்து 12 சவரன், 70 ஆயிரம் கொள்ளை