×

2020-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு: கிருஸ்துமஸ் வரை 23 நாட்கள் அரசு விடுமுறை

சென்னை: 2020-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என 2020-ம் ஆண்டில் மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  அதில் 7 நாட்கள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகிறது. தமிழக அரசு, 2015-ம் ஆண்டில் 24 நாட்களும், 2016-ம் ஆண்டில் 23 நாட்களும், 2017-ம் ஆண்டில் 22 நாட்களும், 2018-ம் ஆண்டில் 23 நாட்களும், 2019-ம் ஆண்டில் 23  நாட்களை பொது விடுமுறை நாட்களாக அறிவித்திருந்தது. அடுத்த 2020-ம் ஆண்டிற்கும் நடப்பு ஆண்டை போலவே, 23 நாட்களை பொது விடுமுறை நாட்களாக அறிவித்துள்ளது.

ஆனால், இந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 3 நாட்கள் தொடர் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனை பொன்று 2020-ம் ஆண்டில் வேறு நாட்களிலும் அரசு விடுமுறை அளிக்க வாய்ப்பு உள்ளது. இதனை தவிர, இயற்கை  சீற்றம், மாவட்ட பண்டிகைகள் உள்ளிட்ட நாட்களில் மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும். பொது விடுமுறை நாட்களில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் மூடப்படும்.  அனைத்து ஞாயிற்று கிழமைகளும், அரசின் விடுமுறை நாட்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பொது விடுமுறை நாட்கள் விவரம் வருமாறு:

எண்.  பண்டிகை                 தேதி        கிழமை

01.    ஆங்கில புத்தாண்டு   01.01.2020     புதன்
02.   பொங்கல்                     15.01.2020     புதன்
03.   திருவள்ளுவர் தினம்  16.01.2020    வியாழன்
04.   உழவர் திருநாள்         17.01.2020     வெள்ளி
05.   குடியரசு தினம்            26.01.2020    ஞாயிறு

06.  தெலுங்கு வருடப்பிறப்பு                           25.03.2020   புதன்
07.  வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு            01.04.2020    புதன்
08.  மகாவீர் ஜெயந்தி                                       06.04.2020  திங்கள்
09.  புனித வெற்றி                                             10.04.2020   வெள்ளி
10.  தமிழ்ப்புத்தாண்டு மற்றும்
    டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பிறந்த தினம்  14.04.2020 - செவ்வாய்

11.  மேதினம்                     01.05.2020    வெள்ளி
12.  ரம்ஜான்                      25.06-2020    திங்கள்
13.  பக்ரீத்                         01.08.2020    திங்கள்
14.  கிருஷ்ண ஜெயந்தி   11.08.2020     செவ்வாய்
15.  சுதந்திர தினம்           15.08.2020     சனி

16.  விநாயகர் சதுர்த்தி    22.08.2020   சனி
17.  மொகரம்                    30.08.2020   ஞாயிறு
18.  காந்தி ஜெயந்தி        02.10.2020   வெள்ளி
19.  ஆயுத பூஜை             25.10.2020    ஞாயிறு
20.  விஜயதசமி               26.10.2020   திங்கள்

21.  மிலாது நபி      30.10.2020    வெள்ளி
22. தீபாவளி          14.11.2020    சனி
23. கிறிஸ்துமஸ்   25.12.2020     வெள்ளி

Tags : Government of Tamil Nadu ,Public Holidays , List of Public Holidays of the Government of Tamil Nadu for 2020
× RELATED பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி...