×

சீன அதிபருக்கான மெனுவில் தமிழர்களின் பாரம்பரிய உணவான இட்லி, தோசை, வடை

சீன அதிபருக்கான உணவு மெனுவில் தமிழர்களின் பாரம்பரிய உணவுகளான இட்லி, தோசை, வடை உள்பட பல்வேறு உணவுகள் இடம் பிடித்துள்ளது.இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு இன்றும், நாளையும் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இந்த சந்திப்பு தமிழகத்தின் மதிப்பை உலக அரங்கில் உயர்த்தியுள்ளது. தலைவர்களை வரவேற்க  மாமல்லபுரம் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. தலைவர்கள் சந்திப்புக்காக சீன அதிபர் இன்று பகல் 1.30 மணியளவில் சென்னைக்கு வருகிறார். அங்கு அவருக்கு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. வரவேற்பு  நிகழ்ச்சியை முடித்து கொண்டு அவர் கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழாவுக்கு செல்கிறார். அங்கு அவருக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவருக்காக சீன உணவு வகைகளுடன், தென்னிந்திய உணவுகளும் பரிமாற ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

உணவு பட்டியலில் சீன அதிபர் விரும்பி சாப்பிடும் வெங்காயம், இறைச்சியால் தயாரிக்கப்பட்ட சாதம், முட்ைடகோஸ், கேரட் கலந்த வறுத்த ஈரல், நூடுல்ஸ், வெஜிடபிள் சாலட், பயறு வகைகள், சூப் வகைகள் உள்ளிட்டவை இடம்  பெற்றுள்ளன. அது மட்டுமல்லாமல் தென்னிந்திய உணவு வகைகளான அரிசி சாதம், சாம்பார் சாதம், வத்தக்குழம்பு, ரசம், பிரியாணி, பிரிஞ்சி,  பட்டர் நான், சப்பாத்தி, ரொட்டி, புலாவ், தக்காளி, கேரட் சூப் உள்ளிட்ட 28 வகையான உணவு  வகைள் இடம் பெற்றுள்ளது. காலை உணவாக சிக்கன் டிக்கா, சோயா, மசாலா, மெல்லிய நூடுல்ஸ் (சவ் மின்), தடித்த நூடுல்ஸ் (ஷன்காளிணி நூடுல்ஸ்) பொறித்த கறியுடன் கூடிய கலவை சோறு ( சோப் கோளிணி), தேநீர், குளிர்பானம், சுவிட்,  கேக் உள்ளிட்டவை இடம் பெறுகிறது. அதே நேரத்தில் தமிழர்களின் பாரம்பரிய உணவான இட்லி, தோசை, வடை, சாம்பார், சட்னி, வெண்பொங்கல், பூரி, இடியாப்பம், வடைகறி உள்ளிட்டவைகளும் இடம் பெற செய்துள்ளன. தமிழர்களின்  பாரம்பரிய உணவு வகைகளை சீன அதிபருக்கு விளக்கி சொல்லி ருசி பார்க்கவும் சமையல் கலைஞர்கள் அங்கு நிறுத்தப்படுகின்றனர்.

Tags : President ,Chinese ,Vadai , Chinese President, Traditional,Tamils, Food Idli, Dosa, Vadai
× RELATED ‘Menனு முழுங்குறாங்கப்பா நம்மளை......