×

மிதக்கும் அணு மின்நிலையம்

நன்றி குங்குமம் முத்தாரம்

மிதக்கும் நகரம், மிதக்கும் சந்தை, மிதக்கும் கிராமம் வரிசையில் இப்போது உலகின் முதலாவது மிதக்கும் அணுமின்நிலையம். அதுவும் ரஷ்யாவில். இந்த அணுமின் நிலையத்துக்கு பரவலான வரவேற்பு இருந் தாலும், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தங்களின் கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர்.
சுமார் 21 டன் எடையில், 144 மீட்டர் நீளமுள்ள இந்த அணுமின்நிலையத்தை ரஷ்யாவைச் சேர்ந்த  ரோசடோம் அணுசக்தி கார்ப்பரேஷன் வடிவமைத்துள்ளது. இதற்கு ‘அகாடெமிக் லோமோனோ சோவ்’ என்று பெயர்சூட்டியுள்ளனர். செயின்ட் பீட்டர்ஸ் பர்க்  நகரில் 2007-ம் ஆண்டு இந்தக் கப்பலுக்கான கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டபோதே மிதக்கும் அணுமின்நிலையம் பெரிய டிரெண்டானது. கடந்த ஜூலையில் கட்டுமானப் பணி முழுமையாக முடிவடைந்து, மிதக்கும் அணு மின்நிலையம் செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது. இந்த மிதக்கும் அணுமின் நிலையத்தைத் தாங்கிப் பிடித் திருக்கும் கப்பல் ஆகஸ்ட் 23- ம் தேதி முர்மான்ஸ்க் என்ற துறைமுகத்தில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்தது.

சுமார்  5 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து கடந்த வாரம் பெவக் என்ற துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்தத் துறைமுக  நகரில் சுமார்  4 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இங்கே தான் மின்சாரம் தயாரிக்கும் பணியை ஆரம்பிக்கப் போகிறது ‘அகாடெமிக் லோமோனோசோவ்’. இதில் சுமார் 70 மெகாவாட் திறன் உள்ள மின்சாரத்தை உற்பத்தி  செய்ய முடியும். இதனால்  10 ஆயிரம் பேருக்குப் போது மான மின்சாரத்தை வழங்க முடியும். இந்தப் பரிசோதனை முயற்சி வெற்றிபெறும் தருவாயில் இது மாதிரியான மிதக்கும் அணு மின் நிலையத்தை உருவாக்கி உலகம் முழுவதும் கொண்டு செல்ல ரஷ்யா திட்டமிட்டுள்ளது. ஆனால், எந்த வகையான அணு உலையாக இருந்தாலும் கதிர் வீச்சு, அணுக்கழிவுகள் வெளிப்படும்; விபத்துகளும் நேரிடலாம் என்று எச்சரிக்கின்றர் இயற்கை ஆர்வலர்கள்.

Tags : nuclear power plant , Russia, Floating, Nuclear Power Plant, Academic Lomino Chow
× RELATED கூடங்குளம் முதலாவது அணுமின்...