×

மீன் பக்கோடா

எல்லா மாவுகளையும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு, அதில் முட்டையை உடைத்து ஊற்றி, ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள், தேவையான உப்பு, தேவையான அளவு தண்ணீரை ஊற்றிக்கலந்து சுமார் அரை மணி நேரம் மூடி வைக்கவும். வாணலியில் 3 ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும், பொடியாக நறுக்கிய பல்லாரி, பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு மீதியுள்ள தூள்களைச் சேர்த்து, சிறிது வதக்கிய முள் இல்லாத மீன் துண்டுகளையும் சேர்த்து 5 நிமிடங்கள் மிதமான தீயில் வேக விடவும். பிறகு அடுப்பை அணைத்து விட்டு, மீன் கலவையை ஆற வைத்து, அத்துடன் கொத்தமல்லித்தழையை சேர்த்து நன்கு மசிக்கவும். இந்த கலவையை கடலை மாவு கரைசலில் சேர்த்து நன்கு கலக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பக்கோடாக்களாக போட்டு பொன்னிறமாக வந்ததும் எடுக்கவும். ருசியான மீன் பக்கோடா ரெடி.

Tags : Fish pakoda
× RELATED உப்பு பிரமிடுகள்