×

பெருங்குடி மண்டல அலுவலகத்தில் கொசு ஒழிப்பு குறித்த ஆலோசனை கூட்டம்

ஆலந்தூர்: பெருங்குடி மண்டலத்தில் அமைந்துள்ள பள்ளி, கட்டுமான நிறுவன பகுதிகளில் தேங்கியுள்ள கொசுக்களை ஒழிப்பது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். ஆதம்பாக்கம் அடுத்த புழுதிவாக்கத்தில் சென்னை மாநகராட்சி பெருங்குடி 14வது மண்டல அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுலவகத்தில் நேற்று முன்தினம் மண்டல சுகாதார அலுவலர் ராஜா தலைமையில் பள்ளி, தனியார் கட்டுமான  நிறுவன நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில், புழுதிவாக்கம் பகுதியில் பள்ளி, தனியார் கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களில் மண்டல சுகாதாரத்துறை சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. இங்கு தேங்கியுள்ள மழைநீரில் இருக்கும் தளவாட மற்றும் கட்டிட கழிவுகளில்  கொசுக்கள் அதிகளவு உற்பத்தியாகிறது. இவை டெங்கு உள்ளிட்ட பல்வேறு மர்ம காய்ச்சலுக்கு வழிவகுக்கும். இவற்றை அகற்றாதவர்கள் மீது அதிகபட்ச அபராதம் விதிப்பதுடன், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி  அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Meeting , Mosquito Eradication
× RELATED டெல்லியில் மதவழிபாட்டு கூட்டத்தில்...