ஒரு முறை பயன்படுத்தப்படும் வாட்டர் பாட்டிலுக்கு முழு தடை வருமா?: மாற்று வழி காண 3 நாள் கெடு

புதுடெல்லி: வாட்டர் பாட்டில் உட்பட, ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு மாற்று என்ன என்பது குறித்து, குடிநீர், குளிர்பான நிறுவனங்களிடம் மத்திய அரசு ஆலோசனை கேட்டுள்ளது.சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், குளிர்பானங்கள் போன்றவை ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றை தடை செய்யும் முயற்சியாக, நுகர்வோர் விவகாரத்துறை சார்பில் நேற்று கூட்டம் நடந்தது. இதில், குடிநீர் பாட்டில் மற்றும் குளிர்பான நிறுவனத்தினர் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்துக்கு பிறகு மத்திய அமைச்சர் ராம் விலாஸ்  பஸ்வான் கூறு, ‘‘ஒரு முறை பயன்பாட்டுக்கான பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு மாற்ற குறித்து முடிவு எதுவும் இந்த கூட்டத்தில் எடுக்கப்படவில்லை. எனினும், உற்பத்தியாளர்கள் தங்களுடைய கருத்துக்களை வரும் 11ம் தேதிக்குள் வழங்க  கேட்டுக்கொண்டுள்ளேன். இவை அமைச்சரவை குழு மற்றும் பிரதமர் அலுவலகத்துக்கு பரிசீலனைக்காக அனுப்பப்படும். மாற்று ஏற்பாடு கண்டறிந்த பிறகு பிளாஸ்டிக்கிற்கு நிரந்தர தடை விதிக்கப்படும்’’ என்றார்.

 கூட்டத்தில் பங்கேற்ற அகில இந்திய மினரல் வாட்டர் உற்பத்தியாளர் சங்க செயலாளர் பெஹ்ராம் மேத்தா கூறுகையில், ‘‘பேக்கேஜிங் துறையினர் பெட் பாட்டில்களை பயன்படுத்துகின்றனர். இவை உலகம் முழுக்க பயன்பாட்டில் உள்ளது.  இவை 92 சதவீதம் மறு சுழற்சி செய்யப்படுகிறது. விரைவில் நூறு சதவீதத்தை எட்டுவோம்.  அதேநேரத்தில், பேப்பர், கண்ணாடி, ஸ்டீல் போன்றவை பிளாஸ்டிக்கிற்று மாற்றாக கருதப்பட்டாலும், இவையும் சுற்றுச்சூழலுக்கு உகந்தது அல்ல.  பிளாஸ்டிக் பாட்டில் உற்பத்தி துறையில் 7 கோடி பேர் வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.’’ என்றார்.

Tags : Once,,water bottle,total ban ,deadline
× RELATED புற நகர் பகுதிகளில் குவார்ட்டர் பாட்டிலை பறிக்கும் போலீசார்