×

மன்னார்குடி மீன் மார்க்கெட் அருகே புதிதாக கட்டப்பட்டு 6 ஆண்டாகியும் திறக்கப்படாத ரேஷன் கடை

*நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல்

மன்னார்குடி : மன்னார்குடி மீன் மார்க்கெட் பகுதி மக்களின் வசதிக்காக கட்டப்பட்டு 6 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கும் புதிய ரேஷன் கடை கட்டிடத்தை உடனடி யாக மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி 19 வது வார்டுக்குட்பட்ட மீன் மார்க்கெட் உள்ளிட்ட பகுதியில் சுமார் 400 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரு கின்றன. இப்பகுதி மக்கள் ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு ஏதுவாக புதிய ரேஷன் கடை ஒன்றை அமைத்து தருமாறு நீண்ட வருடங்களாக கோரிக்கை விடுத்தது வந்தனர்.

இதனடிப்படையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு மீன் மார்க்கெட் அருகில் ரூ.4 லட்சம் மதிப்பில் புதிய ரேஷன் கடைக்காக கட்டிடம் கட்டப்பட்டது. இருப்பினும் . கடந்த 5 வருடங்களாக புதிய ரேஷன் கடை கட்டிடம் திறக்கப் படாமல் உள்ளதால்அக்கட்டிடம் சேதமடைந்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு வேறு பகுதிக்கு செல்லும் நிலை உள்ளது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் சிலர் கூறுகையில், நீண்ட வருட ங் களாக பூட்டி கிடைக்கும் ரேஷன் கடையை சீரமைத்து மக்கள் பயன்பாட் டிற்கு விடும்படி அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை. வேறு பகுதிக்கு ரேஷன் பொருட்கள் வாங்க செல்வதால் காலம் விரயமாவதோடு தேவையில்லாத அலைச்சலும் ஏற்படுகிறது.

மக்கள் வரிப்பணத் தில் கட்டப்பட்ட கட்டிடம் பூட்டி கிடப்பதால் எந்த நன்மையும் இல்லை. எனவே அதிகாரிகள் இதில் உரிய கவனம் செலுத்தி பழுதடைந்து கிடக்கும் ரேஷன் கடையை முழுமையாக சீரமைத்து பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும் என்றார்.

Tags : Mannargudi ,Fish market,Ration Shop, people request
× RELATED கவர்ச்சிக்கரமான அறிவிப்புகள் மூலம்...