×

வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்தது அதிகாரிகளை கண்டித்து மக்கள் சாலை மறியல்

தண்டையார்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டையில் வீடுகளுக்கு கழிவுநீர் புகுந்ததால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள், அதிகாரிகளை கண்டித்து நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.புதுவண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவில் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இங்கு 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பு காரணமாக கடந்த சில  மாதங்களாக கழிவுநீர் வெளியேறி குடியிருப்பு பகுதியில் தேங்கி வருகிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகரித்து பொதுமக்களுக்கு தொற்றுநோய்  பரவும் அபாயம் உள்ளது.

இந்நிலையில், நேற்று வழக்கம்போல் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டதால் கழிவறைகளில் இருந்து கழிவுநீர் வெளியேறி வீடுகளுக்குள் புகுந்தது. இதனால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். பின்னர், சம்மந்தப்பட்ட அதிகாரிகளை  தொடர்பு கொண்டு இதுபற்றி புகார் அளித்தபோது, முறையான பதிலளிக்கவில்லை, என்று கூறப்படுகிறது.   இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காசிமேடு விரைவு சாலையில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர்.  தகவலறிந்து காசிமேடு  மீன்பிடி துறைமுகம், புதுவண்ணாரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, “பாதாள சாக்கடை அடைப்பு தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினர். இதையேற்று, அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



Tags : The sewage ,flowed , authorities
× RELATED பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி...