×

வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு: புவியரசன் பேட்டி

சென்னை: வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 2 தினங்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கும் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குநர் புவியரசன் பேட்டியளித்தார். சென்னை நாகை இடையே 3 கிலோ மீட்டர் உயரத்தில் வளிமண்டலத்தில் காற்றுச் சங்கமம் நிலவுவதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். மேலும் ஜூன் 1 முதல் இன்று வரை தமிழகத்தில் 18 செ.மீ மழை பதிவாகியுள்ளது எனவும், சென்னையில் இயல்பை விட 5 செ.மீ அதிகம் பெய்துள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், ஒரு சில இடங்களில் இடியுடன் மழை பெய்யும் எனவும் அறிவித்துள்ளது. இந்நிலையில் திருச்சி, பெரம்பலூர், தஞ்சை, தருமபுரி, கடலூர், நாகை, அரியலூர், வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும், சென்னையில் மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


Tags : Mild rain , expected, north Tamil Nadu,Puducherry , next 2 days
× RELATED தமிழக கவர்னர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டார்