தொடர்ந்து உச்சத்தில் இருந்த ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.160 குறைவு: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.3587-க்கும் சவரன் ரூ.28,696-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் சில்லறை வர்க்கத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.47.80-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சனிக்கிழமை அன்று சவரன் ரூ.192 உயர்ந்த நிலையில் இன்று ரூ.160 சரிந்துள்ளது. மேலும் 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.37,440க்கும் விற்பனையாகிறது.

கடந்த 14-ம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.408 குறைந்து ஒரு கிராம் ரூ.3576-க்கும், சவரன் ரூ.28,608-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கடந்த மே மாதம் முதல் உயர்ந்து வந்தது. கடந்த 1-ம் தேதி ஒரு சவரன் 26,480, 2-ம் தேதி 27,064, 3-ம் தேதி 27,328, 5-ம் தேதி 27,680, 6-ம் தேதி 27,784, 7-ம் தேதி 28,376, 8-ம் தேதி  28,464, 9-ம் தேதி 28,552க்கும் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. கடந்த 10-ம் தேதி ஒரு கிராம் தங்கம் 3,582-க்கும், சவரன் 28,656-க்கும் விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : Gold price,continued, decline, Rs. 160
× RELATED சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின்...