×

காசோலை மோசடி வழக்கில் முன்னாள் எம்.பி.அன்பரசுவுக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்

சென்னை : காசோலை மோசடி வழக்கில் முன்னாள் எம்.பி.அன்பரசுவுக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத்தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

வழக்கின் பின்ணணி

ராஜீவகாந்தி கல்வி அறக்கட்டளைக்காக 2002-ல் பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ராவிடம் மத்திய சென்னை முன்னாள் எம்.பி அன்பரசு ரூ. 35 லட்சம் கடன் வாங்கியிருந்தார். கடனுக்காக அன்பரசு கொடுத்த காசோலை, பணம் இல்லாமல் திரும்பியதால் பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பைனான்சியர் முகுந்தசந்த் போத்ரா தொடர்ந்த வழக்கில் அன்பரசு, அவரது மனைவி கமலா, அறக்கட்டளை நிர்வாகி மணி ஆகியோருக்கு 2015-ல் தலா 2 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கி ஐகோர்ட் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டது. அன்பரசு மனைவி இறந்துவிட்டதால் அவரது தண்டனை கைவிடப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் அன்பரசு மேல்முறையீடு

இத்தண்டனையை எதிர்த்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் முதலில் அன்பரசு மேல்முறையீடு செய்தார். ஆனால் கூடுதல் அமர்வு நீதிமன்றம் அன்பரசு உள்ளிட்டோருக்கான சிறை தண்டனையை உறுதி செய்தது. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அன்பரசு மேல்முறையீடு செய்தார். இம்மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அன்பரசுவின் மனைவி காலமாகிவிட்டதால் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை கைவிடப்படுகிறது; அன்பரசு, மணி ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தண்டனை உறுதி செய்யப்படுகிறது. ஆகையால் 2 பேரையும் சிறையில் அடைக்க வேண்டும்என உத்தரவிட்டுள்ளது.

Tags : Anaparasi, Appeal, High Court, Check Fraud, Imprisonment
× RELATED ராஜஸ்தானில் இருந்து அசாமுக்கு சென்ற...