×

சென்னை எண்ணூரில் மின்வாரிய பிளாஸ்டிக் உருளைகள் தீப்பற்றி விபத்து: 200க்கும் மேற்பட்ட வீடுகள் நாசம்

சென்னை: சென்னை எண்ணுரில் அனல்மின் நிலையம் கட்டுமான பணிக்காக வைத்திருந்த ராட்சத பிளாஸ்டிக் உருளைகள் தீப்பற்றி எரிந்ததால் கரும்புகை சூழ்ந்தது. இதை தொடர்ந்து சென்னை எண்ணூர் பர்மா நகர் அருகே காலி மைதானத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட ராட்சத பிளாஸ்டிக் குழாய்கள் அடுக்கடுக்காக வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் நேற்றிரவு திடீரென அக்குழாய்கள் தீப்பற்றி வானுயர எரிந்தது. இதன் காரணமாக அருகே உள்ள வீடுகளில் கரும்புகை சூழ்ந்ததால் பொதுமக்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். இதை தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த முயன்றனர். எனினும் பிளாஸ்டிக் உருளைகள் அடுக்கடுக்காக இருப்பதால் தீயை கட்டுப்படுத்துவதில் கடும் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் உதிவியுடன் நீண்ட நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில் சென்னை எண்ணூர் அனல்மின் நிலையம் கட்ட லேன்கோ நிறுவனம் மூலம் கட்டுமான பணிக்கு வைக்கப்பட்டிருந்த ராட்சத பிளாஸ்டிக் உருளைகள் தீப்பற்றியது தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து  தற்போது ஒப்பந்தம் ரத்தாகி வேலைகள் நிறுத்தப்பட்டதால் கேட்பாரற்று காலி மைதானத்தில் அடுக்கிவைக்கப்பட்ட உருளைகள் தீ விபத்தில் நாசமாகியது. மேலும் இதுகுறித்து அங்குள்ள மக்கள் கூறியதாவது, சுமார் 15 ஆயிரம் குடும்பங்கள் இங்கு வசிப்பதாகவும் மேலும் அப்பகுதியில் இருந்த பிளாஸ்டிக் உருளைகள் தீப்பற்றி எரிந்ததில் கிட்டத்தட்ட 200 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் இதனை தமிழக அரசு கவனத்தில் கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு தருமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 


Tags : Chennai, Ennore, electrical cylinders, fire accident
× RELATED அடையாற்றில் வெள்ளம் ஏற்பட்டால்...