×

திருவள்ளூர் அருகே பயங்கரம் ஹாலோ பிளாக் சேம்பரில் 4 வயது ஒடிசா சிறுமி கொடூர கொலை: பாலியல் பலாத்காரமா என 3 பேரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை

சென்னை: திருவள்ளூர் அருகே ஹாலோபிளாக் தொழிற்சாலையில், 4 வயது ஒடிசா சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் பலாத்காரமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின்  பேரில் மூன்று பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஒடிஷா மாநிலத்தை சேர்ந்தவர் அமீர்(45). இவர் தனது மனைவி மற்றும் மகள் இஷானி(4) ஆகியோருடன், திருவள்ளூர் அடுத்த நேமம் ஆண்டர்சன்பேட்டை அருகே உள்ள ஹாலோபிளாக் கற்கள் தயாரிக்கும் சேம்பர் ஒன்றில் கடந்த 6  ஆண்டுகளாக தங்கி பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை முதல் இஷானியை காணவில்லை. தொடர்ந்து சிறுமி இஷானியை அமீர் மற்றும் அவரது குடும்பத்தினர் இரவு முழுவதும் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று காலை 8 மணியளவில் சேம்பர்  பின்புறம் இஷானி, முகம் முழுவதும் படுகாயங்களுடன் பிணமாக கிடந்தது தெரிந்தது.இதுகுறித்து வெள்ளவேடு போலீசாருக்கு அமீர் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு திருவள்ளூர் டிஎஸ்பி கங்காதரன், இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, சிறுமியின் சடலத்தை பார்வையிட்டனர். தொடர்ந்து,  சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் ரம்போ வரவைக்கப்பட்டது. அது சேம்பருக்குள் சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது.

இதையடுத்து சிறுமி இஷானியின் சடலத்தை போலீசார் மீட்டு பரிசோதனைக்காக திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ‘’அதே ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மூன்று  வாலிபர்கள் இதே சேம்பரில் தங்கி வேலை செய்து வருவதும், அவர்கள் சிறுமியை நேற்று முன்தினம் மாலை அழைத்துச் சென்றதும் தெரியவந்தது.இதையடுத்து சந்தேகத்தின் பேரில் மூவரையும் பிடித்து, போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கழுத்தை நெரித்து கொலை செய்தனரா என்ற  கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.ஆனால், மூவரும் முன்னுக்கு முரணாக பேசுவதால், விசாரணை தொடர்ந்து நடந்துவருகிறது. விரைவில் கொலைக்கான காரணம் முழுவதும் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். 4 வயது ஒடிஷா சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம்  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Terror ,Tiruvallur,Odisha girl, murdered , Halo
× RELATED கோவை ஈஷா யோகா மையம் தொடர்ந்த வழக்கில்...