×

கோவை ஈஷா யோகா மையம் தொடர்ந்த வழக்கில் ஒன்றிய, மாநில சுற்றுச்சூழல்துறை பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கோவை ஈஷா யோகா மையம் தொடர்ந்த வழக்கில் ஒன்றிய, மாநில சுற்றுச்சூழல்துறை பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2006-2014 வரை சுற்றுச்சூழல் அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டியதாக கோவை ஈஷா யோகா மையத்துக்கு சுற்றுச்சூழல் துறை நோட்டீஸ் அனுப்பியது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சுற்றுச்சூழல் துறை நோட்டீஸ் மீது இடைகாலமாக நடவடிக்கை எடுக்க கூடாது என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.


Tags : Coimbatore ,Isha Yoga Center ,Union ,State Environment Department , Isha Yoga Center, State Department of Environment, high court, Order
× RELATED ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு வாக்களித்தார்