×

துப்புரவு பணியாளராக சேர்ந்த பெண்ணுக்கு 34 ஆண்டுகளுக்கு பிறகு பணி நிரந்தரம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: துப்புரவு பணியாளராக 34 ஆண்டுகள் பணியாற்றிய பெண்ணுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்று ெசன்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரசு. இவர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பாபனாசம் சக்கரபள்ளி பஞ்சாயத்து யூனியன் மருந்தகத்தில் துப்புரவு பணியாளராக 1986 ஆகஸ்ட் 24ம் தேதி சேர்ந்தார். ஆனால், 34 ஆண்டுகள்  பணியாற்றியும் இதுவரை அவர் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.இதையடுத்து, தன்னை பணி நிரந்தரம் செய்யக்கோரி சரசு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த மனு கே.ரவிச்சந்திரபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.  மனுதாரர் சார்பில் வக்கீல் பி.சாலமன் ஆஜராகி வாதிடும்போது, மாவட்ட வேலை வாய்ப்புத்துறை மூலம் பணி நியமனம் பெற்றவரை இத்தனை ஆண்டுகள் பணி நிரந்தரம் செய்யாதது விதிகளுக்கு முரணானது என்று வாதிட்டார்.

இதற்கு அரசுத் தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில்,  நிரந்தர பணி என்ற அடிப்படையில் மனுதாரர் சேர்க்கப்படவில்லை. நிரந்தரம் செய்யப்படுவதற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியும் அவரிடம் இல்லை என்று கூறப்பட்டிருந்தது. இருதரப்பு  வாதங்களையும் ேகட்ட நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு:தினக்கூலி அடிப்படையில் அரசு பணியில் ேசர்ந்தவர்கள் 2006 ஜனவரி 1ம் தேதி 10 ஆண்டுகள் பணி நிறைவு செய்திருந்தால் அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு 2006 பிப்ரவரி 28ல் ஆணை பிறப்பித்துள்ளது.  அவர்களின் தகுதியின் அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்றும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாணை பிறப்பித்த தேதியில் மனுதாரர் பணியில் இருந்துள்ளார். எனவே, அவர் பணி நிரந்தரம் செய்யப்படுவதற்கு போதிய முகாந்திரம் உள்ளது. எனவே, மனுதாரர் பணியில் சேர்ந்த நாளிலிருந்து அவரை நிரந்தரம் செய்ய வேண்டும்.  அவருக்குத் தரவேண்டிய பணப்பலன்களை 12 வாரங்களுக்குள் அரசு தரவேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : sanitation worker ,Madras High Court , woman ,joined, Madras, High Court, years
× RELATED கவரிங் நகையை அடகு வைக்க முயன்ற பெண் கைது