×

குற்றாலத்தில் பலத்த மழை : அருவிகளில் கொட்டுது தண்ணீர்

தென்காசி: குற்றாலத்தில் நேற்று முன்தினம் இரவு இடிமின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் மிதமாக கொட்டுகிறது. குற்றாலத்தில் கடந்த இரண்டு வாரமாக பகலில் வெயிலும், மாலை மற்றும் இரவில் பலத்த இடியுடன் மழையும் தொடர்கிறது. நேற்று முன்தினமும் பகலில் வெயில் நீடித்த நிலையில் இரவு 9.15 மணி அளவில் இடியுடன் கூடிய பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக இரவு 12 மணி முதல் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. மெயின் அருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் குளிக்கும் பகுதியில் தண்ணீர் பரந்து விழுகிறது. இதுபோல் ஐந்தருவியிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

இரவில் அருவிகளில் தண்ணீர் கலங்கலாக விழுந்த நிலையில் நேற்று காலை முதல் தண்ணீர் தெளிவடைந்தது. பழைய குற்றாலம் அருவியிலும் தண்ணீர் நன்றாக விழும் நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை இங்கு இல்லை. உள்ளூர் மக்கள் மட்டும் ஒரு சிலர் குளித்து வருகின்றனர். தற்போது கோடைகாலம் என்பதால் அருவிகளில் தண்ணீர் விழும் தகவல் அறிந்து சுற்றுவட்டார பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வரத்தொடங்கியுள்ளனர்.

குற்றாலம் அருவியில் தண்ணீர் வர தொடங்கியுள்ள நிலையில் போலீஸ் பாதுகாப்பு இல்லை. இதனால் மெயின்அருவியில் பெண்கள் குளிக்கும் பகுதியில், குளிக்கும் ஆர்வம் காரணமாக ஆண்கள் அத்துமீறும் சம்பவம் நிகழ்கிறது. கோடை காரணமாக கடந்த ஒரு மாதமாக அருவிகள் வறண்டு காணப்பட்ட நிலையில் அவ்வப்போது பெய்யும் மழை காரணமாக அருவிகளில் தண்ணீர் வர தொடங்கியுள்ளதால் குற்றால பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : court , Courtallam, rain, water,
× RELATED கரூர் அருகே அரவக்குறிச்சி...