×

பதவி உயர்வில் தில்லுமுல்லு.. தில்லுமுல்லு பதிவுத்துறையில் 2,500 பேரின் புரமோஷன் ரத்து?: மறு ஆய்வு செய்யும் பணியில் உயர் அதிகாரிகள் குழு

சென்னை: பதிவுத்துறையில் 2,500 பேரின் பதவி உயர்வை மறு ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இது, ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பத்திரப்பதிவுத்துறையில் இளநிலை உதவியாளர், உதவியாளர், சார்பதிவாளர், மாவட்ட பதிவாளர், ஏஐஜி உட்பட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இந்த பதவி உயர்வு முறையில் இடஒதுக்கீட்டு முறையை அமல்படுத்த கோரி பதிவுத்துறை ஊழியர்கள் சிலர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதை தொடர்ந்து, கடந்த 1997 முதல் தற்போது வரை பதவி உயர்வு வழங்கப்பட்டவர்களின் பட்டியலை அனுப்பி வைக்க வேண்டும். மேலும், பதவி உயர்வு வழங்கப்பட்டவர்களில் யார்,யார் மீது புகார்கள் நிலுவையில் உள்ளது என்பது போன்ற விவரங்களை சேகரிக்க அந்தெந்த மண்டல டிஐஜி, மாவட்ட பதிவாளர்களுக்கு பதிவுத்துறை ஐஜி பாலச்சந்திரன் உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில், பதவி உயர்வு வழங்கப்பட்ட 2,500 பேரின் பட்டியலை பதிவுத்துறை ஐஜி அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இதை தொடர்ந்து, பதிவுத்துறை ஐஜி பாலச்சந்திரன் சார்பில் சமீபத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கூடுதல் ஐஜி தலைமையில் உயர் அதிகாரிகள் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு சார்பில் கடந்த 1997 இடஒதுக்கீட்டு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்த குழுவின் ஆய்வின் பேரில் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் பதவி உயர்வு மறு ஆய்வு செய்யப்படும் என்று பதிவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தற்போது பணி மூப்பு அடிப்படையில் பலர் பதவி உயர்வு பெற்றுள்ள நிலையில், திடீரென அவர்களது பதவி உயர்வை மறு ஆய்வு செய்து இருப்பது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று பதிவுத்துறை ஊழியர்கள் சிலர் தெரிவித்தனர்.இதற்கு முக்கிய காரணம் பலர் பெரிய அளவில் அரசியல் பின்னணியை வைத்து கப்பம் கட்டி பதவி உயர்வை பிடித்தாகவும் சிலர் வழிகாட்டி மதிப்பை குறைத்து அதில் வந்த பணத்தை தங்கள் பாக்கெட்டில் போட்டு கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த பணத்தை கொடுத்துதான் பதவி உயர்வு பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக அத்துறையில் பேச்சு ஓடுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Cancellation , Dilemma,promotion,2,500 people , registry ,canceled?
× RELATED ஓடுபாதையில் சென்று கொண்டிருந்தபோது...