×

இந்திய முறை மருத்துவம், ஓமியோபதி இயக்ககத்தில் வெயிட்டேஜ் முறையால் மருந்தாளுனர்கள் பாதிப்பு

சென்னை: இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்ககத்தில் மருந்தாளுனர் நியமனத்தில் பின்பற்றப்பட்ட வெயிட்டேஜ் முறையால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து மருந்தாளுனர்கள் கூறியதாவது: மருந்தாளுனர்கள் நியமனத்தில், 10ம் வகுப்பு மதிப்பெண், பிளஸ்2  மதிப்பெண், டிப்ளமோவில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் வெயிட்டேஜ் முறை  உருவாக்கப்பட்டது. ஆனால் டிஇடி நுழைவுத்தேர்வில் பிளஸ்2, கல்லூரி, பி.எட்  மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அத்துடன் நுழைவுத்தேர்வும்  மதிப்பெண் அடிப்படையில் தான் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.  2009ம் ஆண்டு ஒருங்கிணைந்த மருந்தாளுனர் டிப்ளமோ படிப்பில் சேர்ந்து படிப்ைப முடித்தவர்களில் 3 பேருக்கு மட்டுமே பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 2018ம் ஆண்டு டிப்ளமோ முடித்த 5 பேருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. தற்போது பிளஸ் 2 தேர்வில், பின்பற்றப்படும் நடைமுறைகள், படிப்பதற்கு 15 நிமிடங்கள் உள்ளிட்டவை சில ஆண்டுகளுக்கு முன் கொண்டு வரப்பட்டவை. அதே போல் சில ஆண்டுகளில் பிளஸ்2 வினாத்தாள் எளிதாக கேட்கப்படும், சில ஆண்டுகளில் கடினமானதாக கேட்கப்படும். ஒருங்கிணைந்த மருந்தாளுனர் படிப்பு தொடங்கப்பட்டு, 2009ம் ஆண்டு மருந்தாளுனர் படிப்பில் சேர்ந்த மாணவர்கள் படித்து முடித்த பின்னரே, தமிழக அரசு வெயிட்டேஜ் முறைக்கான அரசாணையை கொண்டு வந்துள்ளது.

அப்படியிருக்கையில் 2009ம் ஆண்டு முதல் படித்த மாணவர்களுக்கு பணி நியமனத்தில், அவர்கள் படித்த ஆண்டு அடிப்படையில் முன்னுரிமை அளித்திருக்க வேண்டும். ஆனால் நுழைவுத்தேர்வு நடத்தப்படாத நிலையில், எவ்வாறு வெயிட்டேஜ் முறையை மட்டும் வைத்து 239 பேரை பணி நியமனம் செய்தார்கள் என்று தெரியவில்லை. இந்த விதிமீறல் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று, பணி வழங்கப்படாத பட்டதாரிகள் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள தேர்வர்கள் கூறியதாவது: ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்ததால், 2014ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை நுழைவுத்தேர்வு நடத்தப்படவில்லை. அந்த வழக்கில் வெயிட்டேஜ் முறை சரியானது தான் என்றும், அந்த வழக்கில் மேல் முறையீடு செய்யக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டது. அதைத்தொடர்ந்தே மீண்டும் டிஇடி நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது. எந்த தரப்பினருக்கும் பாதிப்பு இல்லாத ஒரு வெயிட்டேஜ் முறையை கொண்டு வர இயலாது. இவ்வாறு டிஇடி தேர்வர்கள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Indian , Indian medicine, homeopathy ,affected by the medicines
× RELATED கடும் வெயில் காரணமாக தமிழகத்துக்கு...