×

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்: சிறப்பு உயர்மட்ட பெண்கள் நிபுணர் குழு

சென்னை: பாலியல் வன்கொடுமைக்கு எதிராக சிறப்பு உயர்மட்ட பெண்கள் நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக சிறப்பு உயர்மட்ட பெண்கள் நிபுணர் குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அதில் பேசிய முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி திலகவதி கூறியதாவது, தமிழக பெண்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் மக்களுடன் இணைத்து செயல்படவே இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். பாலியல் வன்முறை தொடர்பாக, பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாக தெரிவித்தார். பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பாக பேசிய அவர், இதில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி அளிக்கவேண்டிய அமைப்புகள் அனைத்திலும் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளதாக தெரிவித்தார். அதன் காரணமாக தான், பாலியல் தொந்தரவுகள் குறித்த புகார்கள் வெளியில் வரவில்லை என குற்றம் சாட்டினார்.

அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள், காவல்துறை, அரசின் கீழ் சேர்ந்த அனைத்து அமைப்புகள், நீதிமன்றங்கள் ஆகியவை இருந்தபோதிலும் எதோ ஒன்று இத்தனை பெண்களுடைய வாயை அடைந்துள்ளது என கூறினார். பொள்ளாச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் அவர்களை சேர்ந்தவர்கள் இது தொடர்பாக புகார் அளிக்க முடியாமல் ஒரு மோசமான பயம்புறுதலுக்கு உள்ளாகியிருப்பதாக கூறினார். மேலும் இது ஏன் நடக்கிறது? என் பாதிக்கப்பட்டவர்களால் பேச முடியவில்லை? ஏன் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்க முன்வரவில்லை? என்ற பல கேள்விகள் தமக்கு எழுந்திருப்பதாக அவர் தெரிவித்தார். பொள்ளாச்சி மட்டும் இல்லாமல் இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்திருக்கலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

எனவே, பொதுமக்கள் சார்பாகவும், பெண்கள் அமைப்புகள் சார்பாகவும் உயர்மட்ட பெண்கள் நிபுணர் குழுக்கள் இணைந்து ஆலோசனை நடத்தியதாக தெரிவித்தார். அதில் மக்களுக்கு முதலில் நம்பிக்கை ஏற்படுத்த கூடிய ஒரு அமைப்பையும், பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்க வரும் நிலையில் அவர்களுக்கு எல்லா வகையான பாதுகாப்புகள் அளிக்கப்படும் என்கிற நம்பிக்கையை கொடுக்கக்கூடிய ஒரு அமைப்பை உருவாக்க முடியம் என்பதற்காக இந்த உயர்மட்ட பெண்கள் நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். இந்த அமைப்பு மூலமாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் அவர்களுக்காக குரல் கொடுக்க இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மேலும் இந்த அமைப்பு தமிழகம் முழுவதும் அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : women ,expert group , Specialty women expert group, sexual abuse and awareness
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...