×

6 பிரிவினைவாத தலைவர்களுக்கு காஷ்மீர் அரசின் பாதுகாப்பு ரத்து

ஸ்ரீநகர்: காஷ்மீரில் மிர்வைஸ் உமர் பரூக் உள்ளிட்ட 6 பிரிவனைவாத தலைவர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை மாநில அரசு ரத்து செய்துள்ளது.  காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த வியாழனன்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வெள்ளிக்கிழமை நகர் வந்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘‘பாகிஸ்தான் மற்றும் அதன் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயிடம் இருந்து பணம் வாங்குவோர் காஷ்மீரில் இருக்கின்றனர். அவர்களுக்கான பாதுகாப்பு விலக்கப்படும்’’ என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் மாநிலத்தில் 6 பிரிவினைவாத தலைவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை மாநில அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவில், ‘‘மிர்வைஸ் உமர் பரூக், அப்துல் கனி பாத், பிலால் லோனி, ஹசிம் குரேசி, பசால் ஹல் குரேசி மற்றும் ஷபீர் ஷா ஆகியோருக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு ரத்து செய்யப்படுகின்றது. பிரிவினைவாத தலைவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அனைத்து பாதுகாப்பு மற்றும் வாகனங்கள் ஞாயிறு திரும்பபெறப்படும். எந்த பாதுகாப்பு அம்சமும் வழங்கப்படாது. அரசினால் வேறு எந்த வசதி வழங்கப்பட்டு இருந்தாலும் உடனடியாக திரும்ப பெறப்படும். வேறு எந்த பிரிவினைவாத தலைவர்களுக்கும் வழங்கப்பட்ட பாதுகாப்பு ரத்து செய்யப்பட வேண்டுமா என்பது குறித்து காவல்துறை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.இவர்கள் பாகிஸ்தானிடம் இருந்து பணம் வாங்கினார்களா என்ற தகவலை, காஷ்மீர் அரசு வெளியிடவில்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : government ,Kashmiri ,leaders , kashmiri government,cancels,separatist,leaders
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...