×

டெல்லி-சென்னை ரயிலில் ரூ.67.50 லட்சம் சிக்கியது: நாக்பூரை சேர்ந்தவர் கைது

நாக்பூர்: டெல்லியில் இருந்து சென்னை சென்ற ரயிலில் ரூ.67.50 லட்சம் சிக்கியது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். டெல்லி-சென்னை இடையேயான கிராண்ட் டிரங்(ஜி.டி.) எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் பகல் 12.30 மணியளவில் நாக்பூர் ஜங்ஷன் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அந்த ரயிலில் ரயில்வே பாதுகாப்பு படையினர் வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, புர்ணானந்த் மிஸ்ரா(48) என்பவர் வைத்திருந்த ஒரு பெரிய பார்சல் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால், போலீசார் அந்த பார்சலை திறந்து சோதித்த போது அதில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்தன. இதனையடுத்து, போலீசார் பணம் இருந்த பார்சலை கைப்பற்றிய போலீசார், புர்ணானந்த் மிஸ்ராவை கைது செய்து, ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்று விசாரித்தனர்.

விசாரணையில், பணக்கட்டுகள் அடங்கிய பார்சலை புர்ணானந்த் நாக்பூரில் இருந்து சென்னைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. அந்த பார்சலில் மொத்தம் ரூ.67.50 லட்சம் இருந்தது. இவ்வளவு பெரிய தொகையை சென்னைக்கு கொண்டு செல்வதற்கான காரணம் குறித்தும், யாருக்காக இந்த பணம் கொண்டு செல்லப்பட்டது என்பது பற்றியும் ரயில்வே போலீசார் கேட்ட கேள்விகளுக்கு புர்ணானந்த் சரியான பதில் அளிக்கவில்லை. இதனால்,  கைது செய்யப்பட்ட புர்ணானந்தையும் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தையும் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து விட்டதாக ரயில்வே போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Delhi ,Chennai ,Nagpur , RPF, GT Express, Nagpur Railway Station
× RELATED சிஏஜி அம்பலப்படுத்திய மோடி அரசின்...