×

சிவன்மலை கோயிலுக்கு ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்ட மாட்டுடன் வந்த பக்தர்கள்

காங்கயம்: ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட மாட்டுடன் சிவன்மலை முருகன் கோயிலுக்கு வந்த பக்தர்கள் நோட்டை காணிக்கையாக செலுத்தினர்.  காங்கயம் அருகே, சிவன்மலையில் உள்ள முருகன் கோயிலில் நடந்து வரும் தேர்த் திருவிழாவை முன்னிட்டு, காங்கயம், வெள்ளகோவில், ஊதியூர், படியூர், ஓலப்பாளையம், காடையூர், எல்லப்பாளையம், வரதப்பம்பாளையம், குண்டடம் உள்ளிட்ட ஏராளமான கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தைப்பூசத்திற்கு விரதமிருந்து, காவடி எடுத்து பாதயாத்திரையாக வந்து நேர்த்திக் கடன் செலுத்தி வருகின்றனர்.

இதில், நேற்று நடந்த 2ம் நாள் விழாவில், ஊதியூர் அருகே, தீத்தான்வலசு பகுதியை சேர்ந்த பக்தர்கள் அவர்கள் கொண்டு வந்த மாட்டின் கொம்புகள் மற்றும் அதன் உடல் முழுவதும் ரூபாய் நோட்டுக்களால் அலங்காரம் செய்து கோயிலுக்கு அழைத்து வந்தனர். பின்னர், அந்த ரூபாய் நோட்டுக்களை கோயிலுக்கு காணிக்கையாக செலுத்தினர். காவடி குழுவினர் மலைக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு, சிவன்மலை பகுதியில் ஆங்கங்கே கூடாரம் போட்டு பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கி வருகின்றனர். திருவிழாவையொட்டி சிவன்மலை பகுதியெங்கும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : devotees , Sivanamalai, rupee, cow,devotees
× RELATED திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி...