×

அரசு கையகப்படுத்திய நிலத்தின் பட்டாவை ரத்து செய்யும் நோட்டீசை எதிர்த்து முன்னாள் அமைச்சர் தம்பி வழக்கு: தமிழக அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அரசு திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் தம்பியின் நிலத்திற்கான பட்டாவை ரத்து செய்யக்கோரி சென்னை கலெக்டர் நோட்டீஸ் அனுப்பினார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நகராட்சி  நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் பதில் தருமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சென்னை அண்ணாநகரில் யுனைடெட் பிரைவரிஸ் என்ற நிறுவனத்திடமிருந்து 41 ஆயிரத்து 764 சதுர அடி நிலத்தை திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் சகோதரர் தேவராஜன் 1996ல் ₹27 லட்சத்திற்கு   வாங்கியுள்ளார்.

 இந்த நிலத்திற்கு அவருக்கு பட்டா வழங்கப்பட்டது. அதில் அவர் பள்ளி நடத்தி வருகிறார். இந்நிலையில், இந்த நிலம் ஷெனாய் நகர் நகரமைப்பு திட்டத்திற்காக 1950ல் அரசு கையகப்படுத்தப்பட்டு அதற்கு இழப்பீடும்  வழங்கப்பட்டுள்ளது என்றும் அதனால் இந்த நிலத்திற்கான பட்டாவை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று சென்னை கலெக்டர் விளக்கம் கேட்டு தேவவாஜனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.  இந்த நோட்டீசை எதிர்த்து தேவராஜன் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். மனு நீதிபதி பாரதிதாசன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பட்டாவை ரத்து செய்வது தொடர்பான  நோட்டீசை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடி நீர் வழங்கல் துறை செயலாளர், எழும்பூர் - நுங்கம்பாக்கம் தாசில்தார் ஆகியோர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 8ம்  தேதிக்கு தள்ளி வைத்தார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Impersonating, webcam, prevent the tapping...
× RELATED பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி...