×

அமராவதி அணையிலிருந்து வினாடிக்கு 2,880 கன அடி நீர் திறப்பு : கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருப்பூர் : அமராவதி அணையிலிருந்து வினாடிக்கு 2,880 கன அடி நீர்திறக்கப்பட்டுள்ளது. நீர் திறப்பாள் அமராவதி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மடத்துக்குளம், தாராபுரம், அரவக்குறிச்சி கரையோர மக்களுக்கு  மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் 1077 என்ற எண்ணில் உதவிக்கு அழைக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 90 அடி முழு கொள்ளளவு கொண்ட அமராவதி அணை 87.90 அடியை எட்டியுள்ளது. கேரளாவில் பெய்யும் கனமழையால் அணைக்கு 2,966 கன அடி நீர்வரத்து உள்ளது.

மேட்டூர் அணையின் நிலவரம் :

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1.14 லட்சம் கன அடியில் இருந்து 89,015 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 88,518 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 120.31 அடி; நீர்இருப்பு 93.96 டி.எம்.சி. ஆக உள்ளது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 800 கன அடி திறக்கப்பட்டுள்ளது.

முல்லைப்பெரியாறு அணையின் நிலவரம் :

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 2 ஆண்டுகளுக்குப் பின் 136 அடியை எட்டுவதால் முதற்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி, இடுக்கி முல்லைப்பெரியாறு நீரோட்டப் பாதைகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க பொதுப்பணித்துறை அறிவுறுத்தியுள்ளது.

பவானிசாகர் அணையில் நிலவரம் :

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5,593 கன அடியில் இருந்து 8,928 கன அடியாக அதிகரித்துள்ளது. பவானிசாகர் அணையில் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பவானிசாகர் அணை நீர்மட்டம் - 99.38 அடி, நீர்இருப்பு - 28.2 டி.எம்.சி., அணையில் இருந்து 3,800 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : 2,880 cubic feet ,water, Amaravati, flood hazard ,o coastal people
× RELATED கர்நாடகாவில் ஒரே நாளில் 25,005 பேருக்கு கொரோனா தொற்று உறுதி