×

வேலூர் மார்க்கெட்டுக்கு வரத்து குறைவு இஞ்சி மூட்டைக்கு ரூ1,000 உயர்வு

வேலூர்: வேலூர் மார்க்கெட்டில் வரத்து குறைந்ததால் இஞ்சி ஒரு மூட்டை ரூ1,000 ஆக அதிகரித்துள்ளது. வேலூர் மார்க்கெட்டில் காய்கறிகள், பழவகைகள் உட்பட பல்வேறு பொருட்கள் வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வேலூர் மற்றும் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த சிறு வியாபாரிகள் வேலூர் மார்க்கெட்டிற்கு வந்து காய்கறிகளை வாங்கிச்சென்று விற்பனை செய்கின்றனர்.

இதில் காய்கறிகள், ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும், உள்ளூர்களில் இருந்தும் கொண்டுவரப்படுகிறது. இஞ்சி கர்நாடக மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்படுகிறது. கடந்த வாரங்களில் 55 கிலோ மூட்டை இஞ்சி ரூ4,000க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது இஞ்சி வரத்து குறைவால் ஒரு மூட்டைக்கு ரூ1000 அதிகரித்து, ரூ5000 என விற்பனை செய்யப்படுகிறது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vellore Market, Ginger Bundle, Rs 1,000 per rise
× RELATED குழந்தைகளுக்கு எதிரான குற்ற...