×

28ம் தேதி முதல் பிளஸ் 1 துணைத் தேர்வு ஹால்டிக்கெட்

சென்னை: பிளஸ் 1  துணைத் தேர்வுக்குரிய ஹால்டிக்கெட்டுகள் 28ம் தேதி முதல் இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பிளஸ் 1 தேர்வில் தோல்வி அடைந்த மாணவ மாணவியருக்காக தற்போது சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்பட உள்ளது. அதற்காக விண்ணப்பித்துள்ள மாணவ மாணவியர் 28ம் தேதி பிற்பகலுக்கு பிறகு www.dge.tn.gov.in என்ற  இணைய தளத்தில் இருந்து ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

செய்முறைத் தேர்வில் பங்கேற்காமல் எழுத்து தேர்வு மட்டும் எழுதி தோல்வி அடைந்தவர்கள் எழுத்து தேர்வு மற்றும் செய்முறைத்தேர்வு என இரண்டையும் எழுத வேண்டும். செய்முறை மற்றும் எழுத்து தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெறாதவர்கள் எழுத்து தேர்வை மட்டும் எழுதினால் போதும். துணைத் தேர்வுக்கான செய்முறைத் தேர்வு தேதி குறித்த விவரத்தை தேர்வு மையங்களின் முதன்மைக் கண்காணிப்பாளர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக...